வார சந்தையில் வெற்றிலை விற்பனை கடும் சரிவு
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடத்தூரில் வெற்றிலை விற்பனைக்காக நடைபெறும் சிறப்பு வாரச்சந்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 128 கட்டுகளை கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை ரூ.5000 முதல் அதிகபட்சமாக ரூ.10.000 ரூபாய் விற்பனையானது கடந்த வாரத்தை காட்டிலும் ரூ.7000 விலை சரிந்து காணப்பட்டது மேலும் நேற்று ஒரே நாளில் ரூ.2.50 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். விலை சரிவை சந்தித்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
Next Story




