கோவை: தீபாவளி பரபரப்பு: கடை வீதிகளில் அலைமோதிய கூட்டம் !
தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக கோவையின் ஒப்பணக்கார வீதி, கிராஸ்கார்ட் சாலை, 100 அடி சாலை, பெரிய கடை வீதி உள்ளிட்ட முக்கிய கடை வீதிகளில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. சிலர் நெருக்கடியான சாலைகளில் தள்ளுவண்டி கடைகளை சாலையில் நிறுத்தி ஆக்கிரமிப்பதைத் தொடர்ந்து கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காவல் துறையினர் திருட்டு, பரபரப்புக்காக தீவிர கண்காணிப்பு நடத்தி, பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை வழங்கினர்.
Next Story



