முட்டை விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம்

முட்டை விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம்
X
*முட்டை உற்பத்தியாளர்கள் நேரடியாக விற்பனை செய்யக்கூடாது *நாள்தோறும் முட்டை விலை நிர்ணயம் செய்யக்கூடாது *முட்டை விற்பனையாளர்கள் நல வாரியம் அமைக்க வேண்டும். முட்டை விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் செல்லப்பாண்டி திண்டுக்கல்லில் பேட்டி
திண்டுக்கல் மாவட்ட அனைத்து மொத்த முட்டை விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை முட்டை விற்பனையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று திண்டுக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு தென் மண்டல முட்டை விற்பனையாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செல்லப்பாண்டி தலைமை தாங்கினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்பு செல்லப்பாண்டி செய்தியாளர்களிடம் பேசுகையில் :- முட்டை உற்பத்தியாளர்கள் நாள்தோறும் முட்டை விலை நிர்ணயம் செய்வதால் தங்களால் முட்டையை வாங்கி வந்து விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நாள்தோறும் விலை நிர்ணயம் செய்வதால் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. தங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. நாள்தோறும் விலை நிர்ணயம் செய்வதால் லட்சக்கணக்கான முட்டை வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர் ஏராளமானோர் முட்டை தொழிலை விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு சென்று விட்டனர். அதேபோல் முட்டை உற்பத்தியாளர்களும் முட்டையை விற்பனை செய்வதால் தங்களுக்கு வியாபாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மேலும் போட்டிகள் அதிகமாவதால் தங்களது தொழில் நசுக்கப்படுகிறது. கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக தென் மாவட்டங்களில் உள்ள திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி உட்பட 10 மாவட்டங்களை ஒன்றிணைத்து என் மாநில அளவில் சங்கம் துவங்கப்பட்டுள்ளது. தினசரி விலை நிர்ணயம் செய்வதை தமிழக அரசு தடுப்பு நிறுத்த வேண்டும். முட்டை விற்பனை நல வாரியம் தமிழக அரசு அமைக்க வேண்டும், பண்ணை உரிமையாளர்கள் நேரடியாக முட்டை விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 7ஆம் தேதி முதல் மாநில மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வரை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளிக்க உள்ளனர். தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளோம். இல்லையென்றால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.
Next Story