கோவை: வேல் வழங்கும் விழா: தமிழகம் முழுவதும் வேல் பூஜை நடத்தத் திட்டம் !
விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில், தமிழகம் முழுவதும் அக்டோபர் 25 முதல் 27 வரை வேல் பூஜை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதன் முன்னோட்டமாக கோவை சூலூர் கண்ணம்பாளையம் ஆறுபடை முருகன் கோவிலில் வேல் வழங்கும் விழா நடைபெற்றது. காமாட்சிபுரி ஆதீனம் இரண்டாம் குரு மகா சன்னிதானம் ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர ஸ்வாமிகள் முன்னிலையில், கந்த சஷ்டி கவசம் முழங்க வேல்களுக்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பூஜை செய்யப்பட்ட இந்த வேல்கள், கோவை புறநகர் கிராமக் கோவில்களில் பூஜைகள் செய்ய எடுத்துச் செல்லப்பட உள்ளன. நிகழ்ச்சியில் VHP மாநிலத் துணைத் தலைவர் ராமமூர்த்தி, மாநிலச் செயலாளர் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு கந்த சஷ்டி கவசம் புத்தகமும் பிரசாதமும் வழங்கப்பட்டது.
Next Story



