வடமாடு மஞ்சு விரட்டு போட்டி
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் மத்தம் மேலநாடு 55 நிர் கல்லம்பட்டி கழுவும்பாறை சுவாமி கோவில் மாடு நினைவாக இரண்டாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு நேற்று (அக்.12)நடைபெற்ற போது மதுரை சிவகங்கை, ராம்நாடு தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான காளைகள் வரவழைக்கப்பட்டன. வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடி காளைகளை அடக்கினர்கள். இதனை கிராம மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
Next Story




