கொடைக்கானலில் வெளுத்து வாங்கிய கன மழை

கொடைக்கானலில் வெளுத்து வாங்கிய கன மழை
X
கொடைக்கானல் மலைப்பகுதியில், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கியது கனமழை.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசான மழையும் பனி மூட்டமும் நிலவி வருகிறது. இந்நிலையில், இன்று காலை முதல் மேக மூட்டம் இருந்த நிலையில், பிற்பகலில், சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால், நாயுடுபுரம், ஏரி சாலை, செண்பகனூர், அப்சர்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், ஆர்.டி.ஓ. ஆபீஸ், ரேடியோ ஸ்டேஷன் செல்லும் சாலைகளில், மழை நீர் வெளியேறாமல் தேங்கி நின்றதால், பொது மக்கள் சாலையை கடப்பதற்கு சிரமம் அடைந்தனர். தொடர்ந்து மேல் மலை, கீழ் மலைப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால், குளிர்ந்த காலநிலை நிலவி வருகிறது.
Next Story