கரூரில் படகு சவாரி செய்து சுற்றுலாத்தலத்தை பார்வையிட்டார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.
கரூரில் படகு சவாரி செய்து சுற்றுலாத்தலத்தை பார்வையிட்டார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல். தமிழக சுற்றுலாத் துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை இன்று தமிழக முதலமைச்சர் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா பகுதியில் அமைந்துள்ள பொன்னணி ஆறு அணையை சுற்றுலா தலத்தில் மேம்பாடு செய்யும் விதமாக உணவகம் மற்றும் படகு குழாமை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி மற்றும் அரசு துறை அதிகாரிகள் மோட்டார் படகு பொருத்திய படகில் பொன்னணி ஆறு அணையை சுற்றி பார்த்தனர். விரைவில் இந்த படகு சவாரி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இரண்டு மோட்டார் பொருத்திய படகுகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அணையில் நீர் கொள்ளளவு திறன் 51 அடியாகும்.அண்மையில் பெய்த மழை காரணமாக தற்போது அணையில் நீர் இருப்பு 31 அடியாக உள்ளது.அணையின் நீர்மட்டம் 41 அடிக்கு மேல் செல்லும்போது பாசனத்திற்காக இந்த அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கரூர் மாவட்டத்தில் சுற்றுலா துறையை மேம்படுத்தும் விதமாக இந்த அணையில் இன்று படகு குழாமை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
Next Story





