கோவை ரெயில் நிலையத்தில் பயணிகளுக்காக தற்காலிக கூடாரம் அமைப்பு !

தீபாவளியை முன்னிட்டு வடமாநில தொழிலாளர்கள் ஊர் திரும்பல் – பயணிகள் வசதிக்காக கூடாரம் அமைப்பு.
தீபாவளியை முன்னிட்டு வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருவதால் கோவை ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனை முன்னிட்டு, ரெயில்வே நிர்வாகம் சார்பில் பயணிகள் வசதிக்காக நுழைவு வாயில் அருகிலும், நடைமேடை–1 பகுதியில் இரு தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் ரெயிலுக்காக காத்திருக்கும் பயணிகள் இக்கூடாரங்களில் தங்கிக் கொள்ளலாம் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story