மேட்டுப்பாளையத்தில் வனக்கல்லூரி மாணவர்கள் மலையேற்றப் பயிற்சி !

மேட்டுப்பாளையத்தில் வனக்கல்லூரி மாணவர்கள் மலையேற்றப் பயிற்சி !
X
மேட்டுப்பாளையம்–கோத்தகிரி சாலையில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம்–கோத்தகிரி சாலையில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டனர். பி.எஸ்சி. வனவியல் பாடப்பிரிவைச் சேர்ந்த 35 மாணவ, மாணவிகள் குஞ்சப்பனை வரை சுமார் 8 கி.மீ. தூரம் மலைப்பாதையில் பயிற்சி மேற்கொண்டனர். பயிற்சியை வனக்கல்லூரி முதல்வர் நிஹார் ரஞ்சன் தொடங்கி வைத்தார். வனத்துறையினரின் பாதுகாப்புடன் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் மாணவர்கள் முள் காடு, இலையுதிர் காடு, பசுமைமாறா காடு என மூன்று வகை காடுகளை நேரில் பார்வையிட்டனர். வனவியல் இனப்பெருக்கத்துறை தலைவர் ஐ.சேகர், பேராசிரியர் கே.ஆர்.ரமேஷ் குமார், உதவி பேராசிரியர் சிவக்குமார் உள்ளிட்டோர் இணைந்து செயல்பட்டனர்.
Next Story