கரூர் -முதலமைச்சர் கோப்பை காண வளைகோல் பந்து போட்டியில் மாநில அளவில் விளையாட தேர்வு பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு.
கரூர் -முதலமைச்சர் கோப்பை காண வளைகோல் பந்து போட்டியில் மாநில அளவில் விளையாட தேர்வு பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு. முதலமைச்சர் கோப்பைக்கான வளைகோல் பந்து விளையாட்டுப்போட்டி திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் கரூர் தான்தோன்றிமலை மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஆர் ஏ ரித்திகா,எஸ் எஸ் சஸ்மிதா ஆகியோர் கலந்துகொண்டு மாவட்டத்தில் முதலிடம் பெற்று மாநில அளவில் விளையாட தேர்வு செய்யப்பட்டனர். 2025- 26 ஆம் ஆண்டிற்கான குடியரசு தின விழா போட்டியில் இதே பள்ளி மாணவன் தரனீஷ் மாவட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று மாநில அளவில் விளையாடத் தேர்வாகி உள்ளார். இவர்கள் அனைவருக்கும் இன்று பாராட்டு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் முதல்வர் ஜெயசித்ரா தலைமையில் நடைபெற்றது. பள்ளியில் தாளாளர் பேங்க்சுப்ரமணியன் கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்கு அரசு வழங்கிய பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை வழங்கி மாணவர்களை பாராட்டினார். இந்நிகழ்வில் விளையாட்டு துறை ஆசிரியர்கள் சக்திவேல் திலகவதி ஆசிரியை தாரணி ஆகியோர் மாணவ - மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story



