பனை விதைகள் நடும் பணியில் விடியல் சமூக ஆர்வலர்கள்

பனை விதைகள் நடும் பணியில் விடியல்  சமூக ஆர்வலர்கள்
X
குமாரபாளையம் அருகே தமிழக அரசு அறிவித்த 6 கோடி பனை விதை நடும் பணிக்காக, பனை விதைகள் நடும் பணியில் விடியல் சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டனர்.
குமாரபாளையம், அக். 14 மாநில நாட்டு நலப்பணித்திட்டம் குழுமம் மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நாமக்கல் மாவட்டம் சார்பாக 6 கோடி பனைவிதைகள் நடும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் அருகே விடியல் ஆரம்பம் பிரகாஷ் தலைமையில் சமூக ஆர்வலர்கள், பங்கேற்று பனை விதைகளை நட்டனர்.. இது குறித்து சமூக ஆர்வலர் பிரகாஷ் கூறியதாவது: கடந்த ஆண்டு மாவட்ட கலெக்டர் உமா தலைமையில் ஒரு கோடி பனை விதை நடும் திட்டத்தில் நாங்கள் குமாரபாளையம் பகுதியில் 20 ஆயிரம் பனை விதைகள் நட்டோம். தற்போது தமிழக அரசு அறிவித்த 6 கோடி பனை விதை நடும் பணியில், தற்போதைய கலெக்டர் துர்கா தலைமையில், மேலும் கூடுதலாக பனை விதைகள் நட ஏற்பாடுகள் செய்து வருகிறோம். கடந்த ஆண்டு நட்ட மரங்கள் யாவும் தற்போது நன்கு வளர்ந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். பனை விதை நடும் பணியை இன்ஸ்பெக்டர் தவமணி துவக்கி வைத்தார். தீயணைப்பு துறை நிலைய அலுவலர் செங்கோட்டுவேலு, துணை அலுவலர் தண்டபாணி, வணிகர் சங்க தலைவர் காமராஜ், ஜமுனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Next Story