போட்டி பூமி பூஜையால் பரபரப்பு
Komarapalayam King 24x7 |13 Oct 2025 7:29 PM ISTகுமாரபாளையத்தில் சுமார் 44 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் புதிய சாலை பணியின் திமுகவினரும் அதிமுகவின் மாற்றி மாற்றி பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
குமாரபாளையம். அக்.-14 நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காந்தி நகர் பகுதியில் உள்ள முதல் வீதியில் தார் சாலை அமைப்பதற்காக தமிழக முதல்வர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் மூலமும் செப்டம்பர் உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்தும் சுமார் 44 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அதற்கான பூமி பூஜை இன்று நடைபெறுவதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் இன்று காலை அப்பகுதியில் திடீரென திமுக கொடிகள் நடப்பட்டன அதனைத் தொடர்ந்து அதிமுக கொடிகளும் நடப்பட்டது மதியம் 2 மணியளவில் பூஜை நடைபெறும் என திமுகவினரும் அதிமுகவினரும் ஒரே நேரத்தில் குறித்து பூஜை செய்வதாக இருந்தது இது குறித்து தகவல் அறிந்ததும் குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி மற்றும் வட்டாட்சியர் பிரகாஷ் ஆகியோர் இரு தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினர் நிலையில் மதியம் 2 மணியளவில் திமுகவின் அட்மா உறுப்பினர் நாச்சிமுத்து தலைமையில் திமுகவினர் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்துவிட்டு சென்றுவிட்டனர் அதன் பிறகு பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பூமி பூஜையை முடித்துக் கொண்டு குமாரபாளையம் காந்திநகர் பகுதியில் உள்ள முதல் வீதிக்கு வந்த குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தங்கமணி திமுகவினர் பூஜை செய்துவிட்டு சென்ற அதே இடத்தில் மீண்டும் பூஜைகளை செய்து பணியை துவக்கி வைத்தார் ஒரு சாலை வைக்க இருதரப்பினரும் மாற்றி மாற்றி பூச்சி செய்து பணிகளை துவங்கியது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது
Next Story


