கரூர் -பஸ் ஸ்டாப் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது. மது பாட்டில்கள் பறிமுதல்.

கரூர் -பஸ் ஸ்டாப் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது. மது பாட்டில்கள் பறிமுதல்.
பஸ் ஸ்டாப் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது. மது பாட்டில்கள் பறிமுதல். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத மது விற்பனை நடப்பது குறித்து மதுவிலக்கு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது இந்த தகவலின் அடிப்படையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகம் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.30 மணி அளவில் கோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது கரூரில் செயல்படும் ஒரு பாலிடெக்னிக் ஆயில் மில் பஸ் ஸ்டாப் அருகே சட்டவிரோதம் அது விற்பனை நடப்பது கண்டறியப்பட்டது இந்த விற்பனையில் ஈடுபட்ட கரூர் திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி அம்சவல்லி வயது 45 என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்தால் 29 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அம்சவல்லி மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பின்னர் அவரை காவல் நிலையப் பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
Next Story