சேந்தமங்கலத்தில் மாபெரும் ரத்த தான முகாம்!

X
Namakkal King 24x7 |13 Oct 2025 9:21 PM ISTசேந்தமங்கலம் நகர அரிமா சங்கம்,ஆரிய வைஸ்ய அறக்கட்டளை, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி இணைந்து நடத்திய மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது.
சேந்தமங்கலம் சரண்யா மண்டபத்தில் சேந்தமங்கலம் நகர அரிமா சங்கம், ஆரிய வைஸ்ய அறக்கட்டளை, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் ரத்ததான முகாம் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் எம்பி அவர்களின் வழிகாட்டுதலின் படி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினரும் பிஎஸ்என்எல் ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஆர்எஸ்ஆர் மணி, நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளரும் திசா கமிட்டி உறுப்பினருமான ரவிச்சந்திரன், நாமக்கல் தெற்கு மாவட்ட பொருளாளர் சசிகுமார், நாமக்கல் தெற்கு மாவட்ட துணை செயலாளர் செந்தில் ராஜா, நாமக்கல் தெற்கு மாவட்ட தொழிற்நுட்ப அணி செயலாளர் மனோஜ், சேந்தமங்கலம் சட்டமன்ற மகளிரணி செயலாளர் சத்யா, சேந்தமங்கலம் சட்டமன்ற இளைஞரணி செயலாளர் ஜெகதீஷ், துணை செயலாளர் கொங்கு வேலு, சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் சுந்தரராஜ், சேந்தமங்கலம் ஒன்றிய தொழிற்நுட்ப அணி செயலாளர் மோகன், நகர இளைஞரணி செயலாளர் கொங்கு ராஜா, சேந்தமங்கலம் நகர அரிமா சங்க நிர்வாகிகள் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை குழுவினர் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Next Story
