முள்ளங்கி விளைச்சல் அதிகரிப்பு விலை சரிவு

முள்ளங்கி விளைச்சல் அதிகரிப்பால் விலை சரிவு விவசாயிகள் கவலை
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், அரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஏக்கர்களில் முள்ளங்கி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 3 மாத பயிராக முள்ளங்கி பயிரிடப்படுகிறது. ஏக்கருக்கு 15,000 வரை செலவாகும் நிலையில் தற்போது அறுவடை சீசன் என்பதால் முள்ளங்கி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிலோவிற்கு ரூ.8 கொள்முதல் செய்யப்பட்டு வழி மார்க்கெட்டுகளில் ரூ.16 விற்பனையாவதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்
Next Story