ஜெனரேட்டரில் சிக்கி இடது கை துண்டான பெண்ணுக்கு

ஒன்றிய திமுக சார்பில் ரூ.10 ஆயிரம் நிதி
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் மடப்புரம் ஊராட்சி கடத்திடல்கரை தெற்கு தெருவை சேர்ந்தவர் ரம்யா (23). இவர் வேலை செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இவரது இடது கை ஜெனரேட்டரில் சிக்கி இடது கை துண்டானது. தீவிர சிகிச்சைக்கு பிறகு தற்போது அவர் வீட்டில் ஒய்வெடுத்து வருகிறார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்த, கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளரும், வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சி துணைத் தலைவருமான தாமஸ் ஆல்வா எடிசன், ரம்யாவின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினார். பின்னர், ஒன்றிய திமுக சார்பில் ரூ.10 ஆயிரம் வழங்கினார். அப்போது, வேளாங்கண்ணி பேரூர் செயலாளர் மரிய.சார்லஸ், கவுன்சிலர் வெற்றிவேல், ஒன்றிய பிரதிநிதி காத்தையன், சிறுபான்மையினர் அணி பென்னி, கிளை செயலாளர்கள் பிரபாகரன், பாலகப்பிரமணியன், தனபால், அய்யப்பன், பூபதி, பாலமுருகன், சுரேஷ், தகவல் தொழில்நுட்ப அணி நிர்மல் குமார் மற்றும் பலர் உடனிருந்தனர். ரம்யாவின் தந்தையும் மாற்றுத் திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story