கோவை: குற்றவாளி மீது அரிவாளால் தாக்குதல் – போலீசார் விசாரணை

X
கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே மத்தம்பாளையம் பகுதியில், முன்விரோதம் காரணமாக சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த கமலக்கண்ணன் என்ற நபர் மீது மர்ம நபர்கள் நேற்று அரிவாளால் தாக்குதல் நடத்தினர். மூன்று மாதங்களுக்கு முன்பு ஆயர்பாடி கிராமத்தில் பால் வியாபாரி சஞ்சய் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கமலக்கண்ணன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டு, சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்திருந்தனர். நேற்று மேட்டுப்பாளையத்தில் கையெழுத்திட்டு கோவைக்கு திரும்பிய கமலக்கண்ணனை, நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து வெட்டியதில் அவர் கடுமையாக காயமடைந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story

