புதிய பேருந்து நிலைய பணி துவக்கம்

X
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஆலஞ்சி பகுதியில் பொதுமக்களின் நலன் கருதி அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய நவீன பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் அரசிடம் விடுத்த கோரிக்கையின் பேரில் தற்போது புதிய நவீன பேருந்து நிலையம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு ரூ.1.83 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டதையடுத்து ஆலஞ்சி பகுதியில் புதிய நவீன பேருந்து நிலையம் அமைக்கும் பணியை பாலப்பள்ளம் பேரூராட்சி தலைவர் டென்னிஸ் தலைமையில், பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான செ.ராஜேஷ்குமார் ஆகியோர் இணைந்து நேற்று தொடங்கி வைத்தனர்.
Next Story

