விவசாய நிலத்திற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

விவசாய நிலத்திற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
X
விளாத்திகுளம் அருகே விவசாய நிலத்திற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
விளாத்திகுளம் அருகே விவசாய நிலத்திற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், சென்னமாரெட்டிபட்டி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "எங்கள் பகுதியைச் சேர்ந்த ஊர்மக்கள் மெட்டில்பட்டி கிராமத்தில் உள்ள 300 ஏக்கர் நிலைத்தில் விவசாயம் செய்து வருகிறார். எங்கள் கிராமத்திலிருந்து அயன்கரிசல்குளம் வரை 4 கிமீ தூரத்திற்கு 24 அடி அகல பாதை உள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்தி வந்தோம்.  தற்போது அந்த பாதையை சிலர் ஆக்கிரமித்து ஓடையாக மாற்றியுள்ளனர். இதனால் விவசாயிகள், பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். வருவாய் ஆவணங்களில் அந்த இடம் பாதை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாதையை மீட்க கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. எனவே ஆக்கிரமிப்பில் இருந்து அந்த பாதையை மீட்டு செப்பனிட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story