அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் தகவல்

X
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.7,500 உதவித்தொகையும் ரூ.500 மருத்துவச் செலவுத் தொகையும் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 2025-26ஆம் ஆண்டுக்கான புதிய விண்ணப்பங்கள் tamilvalarchithurai.org/agavai/ என்ற வலைதளம் வாயிலாகவும், அல்லது மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தில் நேரிலும் 17.11.2025க்குள் சமர்ப்பிக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கத் தகுதி: 01.01.2025 அன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ₹1,20,000க்குள் இருக்க வேண்டும். தமிழ்ப்பணி விவரங்கள் மற்றும் இரண்டு தமிழறிஞர்களின் பரிந்துரைச் சான்றுகள் இணைக்கப்பட வேண்டும். பிற அரசுத் திட்ட உதவிகளைப் பெறுபவர்கள் இதில் விண்ணப்பிக்க இயலாது. மேலும் விவரங்களுக்கு: www.tamilvalarchithurai.org
Next Story

