கோவில்பட்டியில் குடியிருப்புகள் மத்தியில் டவர் அமைக்க எதிர்ப்பு

கோவில்பட்டியில் குடியிருப்புகள் மத்தியில் டவர் அமைக்க எதிர்ப்பு
X
கோவில்பட்டியில் குடியிருப்புகள் மத்தியில் தனியார் செல்(ஏர்டெல்) போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அம்பேத்கர் தெரு பகுதியில் உள்ள தனி நபர் இடத்தில் தனியார் செல்போன் (ஏர்டெல்) நிறுவனத்திற்கு செல்போன் டவர் அமைப்பதற்காக ஜேசிபி இயந்திரத்தினை கொண்டு குழி தோண்டும் பணிகள் நடைபெற்றது. குடியிருப்புகள் நெருக்கமாக சுற்றி இருக்கும் பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தோண்டப்பட்ட குழிக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியிருப்புகள் நெருக்கடியாக இருக்கும் மையப்பகுதியில் செல்போன் டவர் அமைத்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்தனர். பொது மக்களின் போராட்டத்தினை தொடர்ந்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செல்போன் டவர் அமைக்க உரிய அனுமதி பெறவில்லை என்று தெரியவந்ததும் பணிகளை உடனடியாக நிறுத்தி தோண்டப்பட்ட குழியை மூட வருவாய் துறை மற்றும் போலீசார் உத்தரவிட்டதை தொடர்ந்து பணிகள் நிறுத்தப்பட்டன. மேலும் தோண்டப்பட்ட குழியை மூடும் பணியும் தொடங்கியது. இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். குடியிருப்புகள் நெருக்கமாக உள்ள தங்களது பகுதியில் செல்போன் டவர் அமைக்க கூடாது என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
Next Story