சங்கரன்கோவிலில் ஆர்ப்பாட்டம்

X
சங்கரன்கோவிலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதி அரசர் பி ஆர் கபாய் மீது காலனி வீசி அச்சுறுத்தல் விடுத்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க செயலாளர் தண்டபாணி தலைமை வகித்தார். செயலாளர் செல்வின், மாவட்டத் துணைச் செயலாளர் செந்தில் வேல் ஆகியோர் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட பொறுப்பாளர் நடராஜன், மாவட்ட தலைவர் மதியழகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட பொருளாளர் பால்ராஜ், மாவட்டத் தலைவர் அசோக் ராஜ், மாவட்ட குழு உறுப்பினர் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க உறுப்பினர்கள், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

