அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டம்

X
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அடுத்த ராமநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (24) பால் கறவை தொழில் செய்து வருகிறார். கணபதி பட்டி கிராமத்தில் பால் கறவைக்கு சென்ற இடத்தில் சந்திரன் என்பவர் மகள் ஆர்த்தி என்பவர் உடன் காதல் மலர்ந்திருக்கிறது. கடும் எதிர்ப்புகளை மீறி கடந்த ஜூன் மாதம் இருவரும் காதல் திருமணம் செய்துள்ளனர். பால் கறவைக்கு ராமச்சந்திரன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கூட்டாத்து அய்யம்பாளையம் கிராமத்தை அடுத்து பெரியார் பாசன கால்வாய் பாலத்தில் ராமச்சந்திரன் சென்று கொண்டிருந்தபோது எதிரே வழிமறித்த சந்திரன் கண்ணிமைக்கும் நேரத்தில் ராமச்சந்திரனை அரிவாளால் சராமாறியாக வெட்டியுள்ளார். கை துண்டான நிலையில் படு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பாலத்திலேயே சரிந்த ராமச்சந்திரன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில் ஆர்த்தி கணவன் மரணத்தில் தொடர்புடைய என்னுடைய அம்மா அண்ணன் மாமா சித்தப்பா ஆகியோர் கைது செய்யப்படவில்லை எனக் கூறி திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு உடலை வாங்க மறுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
Next Story

