அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

X
தமிழக அரசு தீபாவளி பண்டிகைக்கு முன் நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உடனடியாக வழங்க வலியுறுத்தி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, கிளை தலைவர் ராஜாமணி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி, வருவாய்த்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சுகந்தி வாழ்த்துரை வழங்கினர். போராட்டத்தில், நிலுவையில் உள்ள 3% அகவிலைப்படியை தீபாவளி பண்டிகைக்கு முன்பாக உடனடியாக வழங்க வேண்டும். என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி திண்டுக்கல் யூனியன் அலுவலகத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

