இண்டூரில் பனை விதை நடும் விழா

இண்டூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பனை விதைகள் நடும் விழா
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், இண்டூர் ஏரியில் தருமபுரி மாவட்ட நிர்வாகம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, வனத்துறை, பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தன்னார்வலர்கள் அமைப்பு ஆகியோர்கள் இணைந்து பனைவிதைகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் இ.ஆ.ப., இன்று (14.10.2025) துவக்கி வைத்தார்கள். உடன் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், இ.வ.ப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், ஆதி பவுண்டேஷன் நிறுவன தலைவர் ஆதிமூலம் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story