அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசு பள்ளி மாணக்கர்கள் களப்பயணம்
Komarapalayam King 24x7 |14 Oct 2025 6:50 PM ISTகுமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அரசு பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட கல்லூரி களப்பயணம் நிகழ்வு நடந்தது.
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட கல்லூரி களப்பயணம் நிகழ்வு கல்லூரி முதல்வர் (பொ) சரவணாதேவி தலைமையில் நடந்தது. குமாரபாளையம் அருகே உள்ள சவுதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, பாப்பம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் 50 பேர் பங்கேற்றனர். அரசு கல்லூரிக்கு வருகை தந்த அரசு பள்ளி மாணாக்கர்களை முதல்வர் சரவனாதேவி மலர்கள் கொடுத்து வரவேற்றார். கணினி அறிவியல் துறையின் உதவிப் பேராசிரியர் ஈஸ்வரமூர்த்தி, நிகழ்ச்சியின் நோக்கத்தை விளக்கினார். கல்லூரியின் முதல்வர் சரவணாதேவி பேசும்போது, மாணவர்களின் ஒழுக்கம், கல்வித் திறன், மற்றும் கல்லூரியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், மாணவர்கள் தங்கள் இலக்குகளை அடைவதற்கான தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, அனைத்துத் துறைத் தலைவர்களும் வாழ்த்துரை வழங்கி, தங்கள் துறையின் முக்கியத்துவத்தையும், மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் எடுத்துரைத்தனர். குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியர் ஜெயமணி பேசுகையில், கல்லூரி மாணவிகள் கல்வியில் சாதிப்பதன் அவசியம் குறித்தும், சமூகத்தில் பெண்களின் பங்களிப்புக் குறித்தும் பேசினார். கல்லூரிக் குழுக்களின் செயல்பாடுகள் மற்றும் அதன் பயன்கள் குறித்து வணிகவியல் துறைத் தலைவர் ரகுபதி எடுத்துரைத்தார். முன்னாள் மாணவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் உரை ஒரு ஊக்கமூட்டும் பகுதியாக அமைந்தது. மாணவர்களுக்குக் கிடைக்கும் உதவித்தொகைகள் மற்றும் அதைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து கணினி அறிவியல் துறையின் உதவிப் பேராசிரியர் தமிழ்ச்செல்வி எடுத்துரைத்தார்.போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவது பற்றியும் அத்தேர்வுகளின் முக்கியத்துவம் பற்றியும், வணிகவியல் துறையின் இணைப் பேராசிரியர் ஜெயவேல் பேசினார். கல்லூரியில் உள்ள ஆய்வகங்களை அரசு பள்ளி மாணாக்கர்கள் பார்வையிட்டனர். கல்விசாரா நிகழ்வான கல்லூரிக் கலைத்திருவிழா பற்றி ஆங்கிலத் துறைத் தலைவர் பத்மாவதி விவரித்தார். கணினி அறிவியல் துறைத் தலைவர் கார்த்திகேயனி நன்றி கூறினார்.
Next Story


