பௌத்திரம் அருகே சாலையை நடந்து கடக்க முயன்ற வாலிபர் மீது டூ வீலர் மோதி உயிரிழப்பு.

பௌத்திரம் அருகே சாலையை நடந்து கடக்க முயன்ற வாலிபர் மீது டூ வீலர் மோதி உயிரிழப்பு.
பௌத்திரம் அருகே சாலையை நடந்து கடக்க முயன்ற வாலிபர் மீது டூ வீலர் மோதி உயிரிழப்பு. விழுப்புரம் மாவட்டம் கல்யாணம் பூண்டி, ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரெங்கநாதன் வயது 45. இவர் ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 7:40 மணியளவில் கரூர் - கோவை சாலையில் பவித்திரம் அருகே முருகன் நகர் பகுதியில் நடந்து சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது திருப்பூர் மாவட்டம் அவிநாசி அழகாபுரி நகரை சேர்ந்த நவீன் வயது 24 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூவீலர் நடந்து சென்ற ரங்கநாதன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த ரங்க நாதனை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த ரங்கநாதனின் உறவினர் சந்திரன் வயது 63 என்பவர் அளித்த புகாரின் பேரில் டூ வீலரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நவீன் மீது க.பரமத்தி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story