டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி, தனியார் நிறுவன பணியாளர் பலி

டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி, தனியார் நிறுவன பணியாளர் பலி
X
குமாரபாளையம் டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி, தனியார் நிறுவன பணியாளர் பலியானார்.
குமாரபாளையம் அருகே சமயசங்கிலி பகுதியில் வசிப்பவர் சவுந்திரராஜ், 26. தனியார் நிறுவன பணியாளர். இவர் வேலைக்கு செல்வதற்காக நேற்று அதிகாலை 05:30 மணியளவில், தனது ஆக்டிவா டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இவருக்கு பின்னால் வந்த ஈச்சர் சரக்கு வாகனம்., இவர் வந்த டூவீலர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். இவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவரை பரிசோதித்த டாக்டர் இவர் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது; சம்பவம் நடந்த இடத்தில் குப்பாண்டபாளையம் ஊராட்சி பகுதியில் சாலையோரமாக காந்தி நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதியில் இருந்து கொட்டப்படும் குப்பைகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதில் சாப்பிடுவதற்கு எதாவது கிடைக்குமா? என அப்பகுதியில் சுற்றி திரியும் குதிரைகள் வருகிறது. இவைகள் பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகிறது. டூவீலர் ஓட்டுனர் வரும் போது, குதிரைகள் சாலை குறுக்கே நடந்து சென்றதால், அதற்கு வழிவிட்டு ஒதுங்கி செல்ல, டூவீலர் ஓட்டுனர் முற்பட்ட போது, பின்னால் வந்த வாகனத்தில் அடிபடும் நிலை உருவானது. பல உயிர்களை பலி வாங்க காத்திருக்கும் குதிரைகளை அப்புறப்படுத்தவும், மலைபோல் குவித்து வைத்து இருக்கும் குப்பைகளை அகற்றாத ஊராட்சி நிர்வாகத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story