பிணவரை முன்பு அமரர் உறுதியை வழிமறித்து அமர்ந்து பெண் தர்ணா போராட்டம்

X
கொலை செய்யப்பட்ட ராமச்சந்திரனின் மனைவி ஆர்த்தி பிரேதத்தை வாங்க மறுத்து அமரர் ஊர்தியை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டார். கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆர்த்தியின் தந்தை மட்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்... ஆர்த்தியின் தாய் அண்ணன் மற்றும் உறவினர்கள் என பத்து பேரை கைது செய்ய வேண்டும் என காவல்துறையினிடம் எழுதிக் கொடுத்திருப்பதாக ஆர்த்தி கூறுகிறார். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து உறவினர்கள் மற்றும் காவல்துறையினர் ஆர்த்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், காவல்துறையினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டு கட்டாக தூக்கி அப்புறப்படுத்தி பிரேதத்தை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

