தமிழக முதல்வா் தென்காசி வருகை: அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

தமிழக முதல்வா் தென்காசி வருகை: அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
X
தமிழக முதல்வா் தென்காசி வருகை: அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
தென்காசி மாவட்டம் தென்காசியில் தமிழக முதல்வா் பங்கேற்கும் விழா மேடை அமையவுள்ள பகுதியில் அடிப்படை வசதிகள் அமைப்பது குறித்து பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஆய்வு மேற்கொண்டாா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அக். 24ஆம் தேதி அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தென்காசி வருகிறாா். இலத்தூா் விலக்கிலிருந்து ஆய்க்குடிசெல்லும் சாலையில் அனந்தபுரம் பகுதியில் அக். 25 ஆம்தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வா் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா். மேலும், மாவட்டத்தில் முடிவடைந்த பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும்,புதிய திட்டங்களையும் தொடங்கி வைக்கிறாா். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பயனாளிகள் கலந்து கொள்ளவுள்ளனா். எனவே பயனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீா், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் , பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கிறிஸ்டோபா் தாஸ் ஆய்வு மேற்கொண்டாா்.
Next Story