சூளகிரி: மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு.

X
கேரள மாநிலம் கொச்சினை சேர்ந்தவர் ஜோசப் (56) இவர் சூளகிரி அருகேயுள்ள ஒமதேப்பள்ளி பகுதியில் தங்கி கட்டிட வேலைக்கு பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 13-ஆம் தேதி அன்று அவர் அங்குள்ள ஒரு ஓட்டல் கட்டுமான பணியில் ஈடுபட்ட போது மூன்றாவது மாடியில் இருந்து எதிர்பாரவிதமாக அவர் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த ஜோசப்பை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் விச ரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

