போலீஸ் ரோந்து வாகனம் - கார் மோதல்

X
நாகர்கோவில் அடுத்த வெள்ளமடம் அருகே நான்கு வழிச்சாலையில் நேற்று முன்தினம் இரவு நெடுஞ்சாலை ரோந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரம் அதே ரோட்டில் குளச்சலில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற கார் வேகமாக சென்று போலீஸ் ரோந்து வாகனத்தின் பின்னால் மோதியது. இதில் போலீஸ் ரோந்து வாகனம் தூக்கி வீசப்பட்டு ரோட்டோரத்தில் இருந்த பள்ளத்தில் தலைக்கு குப்புற கவிழ்ந்தது. இதில் போலீஸ் ரோந்து வாகனத்தில் இருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகன் (58), ஆயுதப்படை போலீஸ்காரர் சுபாஷ் (36), ஏட்டு செல்வகுமார் (42) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். போலீஸ் ரோந்து வாகனத்தின் மீது மோதிய காரின் முன் பகுதியும் சேதமடைந்தது. அதில் இருந்த 3 பேரும் காயம் அடைந்தனர். இந்த தகவல் அறிந்ததும் ஆழ்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
Next Story

