நாகர்கோவிலில் தேசிய அஞ்சல் வார விழா

நாகர்கோவிலில் தேசிய அஞ்சல் வார விழா
X
பரிசு வழங்கல்
இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அஞ்சல் வார விழா அக்டோபர் 6ஆம் தேதியிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.. தேசிய அஞ்சல் வார விழாவின் நிகழ்வாக கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் வழிகாட்டுதலின்படி, செண்பகராமன்புதூர் கிராமத்தில் அஞ்சல் துறையின் திட்டங்களை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் தெருக்கூத்து நடைபெற்றது. விழாவிற்கான நிகழ்ச்சிகளை நாகர்கோவில் கிழக்கு அஞ்சல் உபகோட்ட ஆய்வாளர் ஜாய்ஸ் ஏற்பாடு செய்திருந்தார்.. அஞ்சல் ஊழியர்கள் குறு நாடகங்களின் மூலம் அஞ்சல் துறையின் சேவைகளைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைத்தனர். தெருக்கூத்து நிகழ்ச்சியில் சிலம்பாட்டம் செய்த மாணவர்களுக்கு அஞ்சலக ஆய்வாளர் ஜாய்ஸ் பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார்.. நிகழ்ச்சியில் செண்பகராமன்புதூர் கிராமத்தின் முன்னாள் தலைவர் கல்யாணசுந்தரம், அஞ்சல் ஊழியர்கள் மற்றும் சுமார் 80க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story