நாகர்கோவில் : டாஸ்மாக் கூட்டு குழு ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில் : டாஸ்மாக் கூட்டு குழு ஆர்ப்பாட்டம்
X
கோரிக்கைகள் வலியுறுத்தி
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களை அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும், டாஸ்மாக் கடைகளில் ஸ்டிக்கர் ஒட்டுவது, ஸ்கேன் செய்வது, சீல் அடிப்பது என வேலைபளு உள்ளதால் காலி மது பாட்டில்களை திரும்ப பெரும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் முன்பு டாஸ்மாக் கூட்டு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட கூட்டுக்குழு தலைவர் நடேசன் தலைமை வைத்தார். மாநில பொறுப்பாளர் மணிகண்டன், மாநில துணை செயலாளர் உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
Next Story