காணொளி மூலம் வாழ்க்கை திறன் கல்வி கருத்தரங்கம்

காங்கேயம் அருகே காணொளி வாயில் மற்றும் குழு விவாதம் வழி வாழ்க்கை திறன் கல்வி கருத்தரங்கம்  நடைபெற்றது
காங்கேயம் தம்மரெட்டிபாளையம் , கீரனூர் அரசு மேல் நிலை பள்ளி  மாணவ மாணவியர்களுக்கு சுய விழப்புணர்வு, முடிவுடுத்தல், தனிப்பட்ட உறவு வளர்த்தல், பச்சாதாபம், சிக்கலை தீர்த்தல், தகவல் தொடர்பு, அறிவு பூர்வசிந்தனை,  படைப்பாற்றல் வளர்த்தல்,  மன அழுத்த மேலாண்மை  உட்பட  ஆளுமை மேலாண்மை  வளர்க்கும் வாழ்க்கை திறன் கருத்தருங்கம் மாணவர்கள் குழு விவாத பங்கேற்புடன் காணொளி வாயிலாகவும் சுகவாழ்வு மைய ஆலோசகர் கருப்புசாமியால் நடத்தப்பட்டது. இந்நிகழ்வுக்கு தம்மரெட்டி பாளையம் தலைமை ஆசிரியர் சண்முகம், கீரனூர் தலைமை ஆசிரியர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் ஆசிரியர் சந்திரசேகரன், வாசுகி, சுமதி, செந்தூர்கனி, திவ்யா உட்பட மாணவ மாணவியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story