கோவை: கனமழை - சாலைகளில் வெள்ளநீர் – பொதுமக்கள் அவதி !

X
கோவை புறநகர் பகுதிகளில் நேற்று மாலை ஒரு மணி நேரம் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். சூலூர் புதிய பேருந்து நிலையம், திருச்சி சாலை, காங்கேயம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் கடைக்காரர்கள் பாதிப்பை சந்தித்தனர். மேலும், சாக்கடை நீர் கலந்த மழைநீர் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சிரமத்தை அதிகரித்தது. இத்தகைய பிரச்சினைகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்க மாநகராட்சி முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

