கோவை: மேம்பாலத் திட்ட தீர்மானத்தில் அ.தி.மு.க-தி.மு.க மோதல்
கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலம் குறித்து மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நேற்று விவாதம் ஏற்பட்டது. முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில், இந்த திட்டம் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி காலத்தில் தொடங்கப்பட்டது என கூறி அவர்களுக்கும் நன்றி கூற வேண்டும் என அ.தி.மு.க மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் வலியுறுத்தினார். இதனால் தி.மு.க உறுப்பினர்களுடன் கடும் வாக்குவாதம் எழுந்தது. பின்னர் வாழ்க எடப்பாடி, வாழ்க வேலுமணி என கோஷமிட்டு பிரபாகரன் மற்றும் ரமேஷ் கூட்டத்திலிருந்து வெளியேறினர். செய்தியாளர்களை சந்தித்த பிரபாகரன், மேயர் மீது முறைகேடு குற்றம் சாட்டி, 103 தீர்மானங்களில் 55க்கு முன் அனுமதி வழங்கப்பட்டதாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக்கேட்டார்.
Next Story



