விபத்து இல்லாமல் தீபாவளி கொண்டாடுவது தீயணைப்பு வீரர்கள் விளக்கம்

விபத்து இல்லாமல் தீபாவளி கொண்டாடுவது தீயணைப்பு வீரர்கள் விளக்கம்
X
விபத்து இல்லாமல் தீபாவளியை கொண்டாடுவது தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வைத்து தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகள் வெடிக்கும் போது விபத்து இல்லாமல் தீபாவளியை எப்படி கொண்டாடுவது என்பது குறித்து பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பு துறை தென்காசி மாவட்ட அலுவலர் சுரேஷ் ஆனந்த் மற்றும் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் தலைமையிலான தீயணைப்பு படையினர் செயல்முறை விளக்கம் அளித்தனர். செயல் விளக்கம் போது பட்டாசுகளை வெடிக்கும் முறை, பட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து விளக்கம் அளித்தும், பட்டாசுகளை வெடிக்கச் செய்து செயல் விளக்கத்துடன் செய்து காண்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் பள்ளி தாளாளர் பழனி செல்வம் உள்ளிட்ட ஏராளமான ஆசிரியர்களும் பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.
Next Story