கிருஷ்ணகிரி: மழை நீர் குறித்து விழிப்புணர்வு- துவக்கி வைத்த கலெக்டர்

X
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அதிநவீன எல்.இ.டி வீடியோ வாகனம் மூலம் மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மழைநீர் சேகரிப்பு குறித்த குறும்படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில்எதிர்வரும் மழைக்காலம் எண்ணற்ற நன்மைகளை வழங்கும் காலம் அருகி வரும் நீர் வளத்தினை மேம்படுத்திட பெருகி வரும் மழைநீரைச் சேகரிப்போம். கண்மாய்கள், குளங்கள், ஊரணிகள், ஏரிகள் பழைமை வாய்ந்த நீராதாரக் கட்டமைப்புகளை ஆழப்படுத்தி மேம்படுத்துவோம். நீரின் பயன்பாட்டிற்கும் நீரின் செறிவுட்டலுக்கும் இடையே உள்ள இடைவெளியை களைய மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நிறுவ வேண்டும்.பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கபட்டது. இப்பேரணி புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆர்சி கிறிஸ்துவ ஆலயம் வரை நடைபெற்றது. இப்பேரணியில் ஒரப்பம் கொன்சாகா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 200 மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story

