ராயனூர் டாஸ்மார்க் கடை அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம்.

ராயனூர் டாஸ்மார்க் கடை அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம்.
ராயனூர் டாஸ்மார்க் கடை அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம் ராயனூர் அருகே பொன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி வயது 55. இவர் திங்கட்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் கரூர் - ராயனூர் சாலையில் அவரது டூவீலரில் சென்றார். இவரது வாகனம் அப்பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடை அருகே சென்றபோது எதிர் திசையில் அடையாளம் தெரியாத மற்றொரு டூவீலர் வேகமாக சென்று தங்கமணி ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது- இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தங்கமணியை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தங்கமணி அளித்த புகாரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட தாந்தோணி மலை காவல்துறையினர் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனம் குறித்தும் வாகனத்தை ஓட்டி வந்த நபர் குறித்தும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story