கோவிந்தம் பாளையம் அருகே டூவீலரில் சென்றவர் மீது லாரி மோதி விபத்து.வாலிபர் படுகாயம்.

கோவிந்தம் பாளையம் அருகே டூவீலரில் சென்றவர் மீது லாரி மோதி விபத்து.வாலிபர் படுகாயம்.
கோவிந்தம் பாளையம் அருகே டூவீலரில் சென்றவர் மீது லாரி மோதி விபத்து.வாலிபர் படுகாயம். கரூர் மாவட்டம் புகலூர் தாலுக்கா பவித்திரம் குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் வயது 42. இவர் செவ்வாய்க்கிழமை அன்று காலை 10:30 மணி அளவில் கோவை - கரூர் சாலையில் அவரது டூவீலரில் கோவிந்தம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது கேரள மாநிலம் பாலக்காடு கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் வயது 34 என்பவர் வேகமாக ஓட்டி வந்த லாரி வடிவேல் ஓட்டி சென்ற டூ வீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வடிவேலுவை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து வடிவேல் அளித்த புகாரின் பேரில் விபத்து ஏற்படும் வகையில் லாரியை ஒட்டிய சந்தோஷ் குமார் மீது கரூர் மாநகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story