ஈஸ்வரமூர்த்தி கிராமத்தில் திமுக கிளை கழக பொறுப்பாளர் ராமலிங்கம் என்பவரின் தூண்டுதலின் பெயரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மயானம் அமைக்க ஆணை ரத்து செய்ய கோரி மக்கள் கோரிக்கை...

X
Rasipuram King 24x7 |15 Oct 2025 8:16 PM ISTஈஸ்வரமூர்த்தி கிராமத்தில் திமுக கிளை கழக பொறுப்பாளர் ராமலிங்கம் என்பவரின் தூண்டுதலின் பெயரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மயானம் அமைக்க ஆணை ரத்து செய்ய கோரி மக்கள் கோரிக்கை...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஈஸ்வரமூர்த்தி கிராமத்தில் திமுக கிளை கழக பொறுப்பாளர் ராமலிங்கம் என்பவரின் தூண்டுதலின் பெயரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மயானம் அமைக்க ஆணை வெளியிட்டு நிலையில் அந்த அரசாணையை ரத்து செய்ய கோரி மக்கள் கோரிக்கை... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள ஈஸ்வரமூர்த்தி கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு பரவக்காடு என்ற பகுதியில் மயானம் உள்ள நிலையில் அவர்களுக்கு ஆதரவாக ஈஸ்வரமூர்த்திபாளையத்தை சார்ந்த திமுக கிளை கழக பொறுப்பாளர் ராமலிங்கம் துண்டுதலின் பெயரில் திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் மூலம் மாவட்ட நிர்வாகம் மூலம் வடக்கு தோட்டத்தில் மாயனம் அமைக்க அரசு ஆணை பிறபித்து உள்ளது. வடக்கு தோட்டத்தில் விவசாய நிலங்களை இடையூறு செய்யும் வகையிலும் பொது மக்களுக்கு இடையே பிரிவினவாத்தை ஏற்படுத்தும் வகையிலும் அமையுள்ள மயானத்திற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் உள்ளனர். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போரட்டமும் நடத்தி உள்ளனர். எனினும் அரசு செவி சாய்க்கவில்லை . இதனால் அப்பகுதி மக்கள் இந்த விடியா திமுக அரசு உடனடி நடவக்கை எடுத்து அந்த அரசு ஆணையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.. மேலும் அப்பகுதியில் உள்ள பொது கோயிலுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சிலரை கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என்றும் கோவில் தர்மகர்த்தா கூறியுள்ளார். அவர்கள் உறவினர்களிடையே பேசிய ஆடியோவும் அவர்கள் வெளியிட்டு உள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது..
Next Story
