கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பொதுக்கூட்ட நெரிசலில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தைச் சந்தித்து சரத்குமார் ஆறுதல் தெரிவித்தார்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பொதுக்கூட்ட நெரிசலில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தைச் சந்தித்து சரத்குமார் ஆறுதல் தெரிவித்தார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பொதுக்கூட்ட நெரிசலில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தைச் சந்தித்து சரத்குமார் ஆறுதல் தெரிவித்தார். கடந்த மாதம் 27ஆம் தேதி நடிகர் விஜய் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்தும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் நாடு முழுவதும் அதிர்வலை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு தனிநபர் ஆணையம் மற்றும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்து வரும் நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இச்சம்பவத்தில் பலியான கரூர் வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த பெருமாள் அவர்களின் மகள்கள் கோகிலா. பழனியம்மாள். இரு குழந்தைகள் உயிரிழந்தது. இந்த நிலையில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினரை பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியும் நடிகருமான ஆர். சரத்குமார் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், என் மனைவியின் தாயார் மறைவால் உடனடியாக வர முடியவில்லை. இப்போது தான் வந்து இந்த குழந்தைகளின் உயிரிழப்பால் துயரத்தில் இருக்கும் குடும்பத்தினரிடம் இரங்கல் தெரிவிக்க வந்துள்ளேன். இது நடக்கக்கூடாத மிக வேதனையான சம்பவம். ஒரு குடும்பத்தில் உயிரிழப்பு என்பது மாற்றிக்கொள்ள முடியாத இழப்பு. இந்த துயரத்தை வார்த்தைகளால் சமாதானப்படுத்த முடியாது. மேலும் அவர்கள் துயரத்திலிருந்து மீண்டு சமநிலையில் வந்தபின், அவர்களின் வாழ்க்கையில் எத்தகைய உதவி தேவையாக உள்ளதோ அதை செய்வதற்கான முனைப்பு என்னிடம் இருக்கிறது. இந்த விஷயத்தில் அரசியல் நோக்கோ, வேறு நோக்கோ எதுவும் இல்லை. இது மனித நேயத்தின் நிலைப்பாடு என்றார். சிபிஐ விசாரணை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சரத்குமார், நான் இந்த சம்பவம் நடந்த நாளில் ஊரில் இல்லை. இப்போது சிபிஐ விசாரணை குறித்து கருத்து கூறுவது சரியாக இருக்காது. உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆகையால் இந்த விவகாரத்தில் நீதிமன்றமே முடிவு செய்யட்டும். என் மன வேதனையை மட்டுமே பகிர்ந்துள்ளேன். என்று தெரிவித்தார்.
Next Story