பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த மக்கள் நீதி மய்யம்

X
Komarapalayam King 24x7 |15 Oct 2025 8:50 PM ISTபாதுகாப்பாக தீபாவளி கொண்டாட குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.
பசுமையான, பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுவோம் எனும் தலைப்பில் குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம், மண்டல தலைவர் காமராஜ், மாவட்ட மகளிரணி செயலர் சித்ரா தலைமையில் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தவமணி பங்கேற்று, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி துவக்கி வைத்தார். பட்டாசு வெடிக்கும் முன் கவனமாக இருக்க வேண்டும், பெற்றோர்கள் கூட இருந்து கண்காணிக்க வேண்டும், சாலையில் வெடிக்கும் போது, போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் வெடிக்க வேண்டும், அருகில் தண்ணீர் வைத்து கொள்ள வேண்டும், புஸ்வானம் விடும் போது, முகத்தை அருகில் வைத்துக்கொள்ள கூடாது, வெடிக்காத பட்டாசுகளை கையால் எடுக்க கூடாது, ஒரே சமயத்தில் அனைத்து குழந்தைகளை பட்டாசு வெடிக்க விட கூடாது, என்பது உள்ளிட்ட கருத்துக்கள் எடுத்துரைத்தனர். இதில் உஷா, கீர்த்திகா, அன்பழகன், பாஸ்கரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story
