உயிர் பலி வாங்க காத்திருக்கும் பைபாஸ் இணைப்பு சாலை

X
Komarapalayam King 24x7 |15 Oct 2025 8:58 PM ISTகுமாரபாளையம் அருகே பைபாஸ் இணைப்பு சாலை பழுதால் உயிர்பலி ஏற்படும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.
குமாரபாளையம் அருகே சேலம் கோவை பைபாஸ் சாலை டீச்சர்ஸ் காலனி அருகே, குமாரபாளையம் நகரிலிருந்து பவானி செல்லும் அரசு, தனியார் பேருந்துகள், இதர வாகனங்கள், பைபாஸ் இணைப்பு சாலை வழியாகத்தான் போயாக வேண்டும். ஆனால் இந்த இணைப்பு சாலை பல்லாங்குழி போல் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகனங்கள் பைபாஸ் சாலையில் ஏறும் முன், பைபாஸ் சாலை வழியாக வரும் வாகனங்கள் இந்த வாகனங்கள் மீது மோதி அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு, உயிர்பளிகளும் அரங்கேறி வருகிறது. இதனை தடுக்க, உடனே இந்த இணைப்பு சாலையை சீரமைத்து, விபத்தில் இருந்து காக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
