கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சதுரங்க சங்கத்தின் துவக்க விழா நடைபெற்றது.
கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சதுரங்க சங்கத்தின் துவக்க விழா நடைபெற்றது. கரூர் நாரதகாண சபாவில் கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சதுரங்க சங்கத்தின் துவக்க விழா சங்கத்தின் தலைவர் கோகுல் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் துணை தலைவர்கள் டாக்டர் சி ராமசுப்பிரமணியம். டாக்டர் டி .எஸ் . எம் . உஷா.ஆர்.சிவ சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. மேலும் சிறப்பு விருந்தினராக CFPD. செயலாளர் இன்டர்நேஷனல் நடுவர் அனந்த்பாபு கலந்து கொண்டார். சங்கத்தின் துவக்க விழாவில் மாவட்ட சங்கத்தை அங்கீகரித்து சான்றளித்த தமிழ்நாடு மாற்று திறனாளிகள் சதுரங்க சங்கம். மற்றும் செஸ் பெடெரேஷன் ஆப் பிஸிகலி டிஸாபிளிடேட் செயலாளர்க்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக தீர்மானிக்கப்பட்டது. CFPD, TNPDCA. வழிகாட்டுதல்படி செயல்படுவதாக தீர்மானிக்கப்பட்டது. கரூர் மாவட்டத்தில் உள்ள சதுரங்க விளையாட்டின் மீது ஆர்வம் உள்ளவர்களை உறுப்பினர்களாக சங்கத்தில் சேர்த்துக் கொள்வது எனவும் அதிகப்படியான சதுரங்கப் போட்டிகள் நடத்த வேண்டும் எனவும், கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு சதுரங்க விளையாட்டை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு தகுந்த முறையில் பயிற்சி கொடுத்து சிறந்த வீரர்களாக உருவாக்கி கரூர் மாவட்டத்திற்கு சிறப்பு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. துவக்க விழா கூட்டத்திற்கு வருகை புரிந்து சிறப்பித்த அனைவருக்கும் செயலாளர் சண்முகம் நன்றி தெரிவித்தார்.
Next Story



