நவோதயா பள்ளி மாணவர் இராஜஸ்தானில் தேசிய அளவில் நடைபெற்ற ஜூடோ போட்டியில் பங்கேற்பு

நவோதயா பள்ளி மாணவர் இராஜஸ்தானில் தேசிய அளவில் நடைபெற்ற ஜூடோ போட்டியில்  பங்கேற்பு
X
சிபிஎஸ்இ படிக்கும் மாணவ, மாணவியருக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறும்
இந்த கல்வி (2025 – 2026 ) ஆண்டு கடந்த செப்டம்பர் மாதம் இராஜஸ்தான் மாநிலத்தில் ஸ்ரீ இஷார் சிங்ஜீ மகாராஜ் பள்ளியில் ஜூடோ போட்டி நடைபெற்றது . பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டார்கள். அதில் நமது நாமக்கல்லில் இருந்து நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் பயிலும் மாணவர் க. லோகேஸ் கலந்துகொண்டு மிகச்சிறப்பாக விளையாடினார். பள்ளியில் நடைபெற்ற வழிபாட்டுக் கூட்டத்தில் பள்ளியின் பொருளாளர் கா. தேனருவி அவர்கள் சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார். அவர் பேசுகையில் “ஜூடோ போட்டி சீன நாட்டில் தோன்றினாலும் நமது தமிழ்நாட்டின் பாரம்பரியமான குத்துச்சண்டை போட்டியின் அடிப்படையாகும் அதில் உள்ள நுணுக்கங்கங்களை நன்றாக கற்றக்கொண்டால் உலக அளவில் சிறந்த வீரராக வெற்றி பெற்று பேரும் புகழும் பெற்று வாழலாம். அதுபோல மாணவர் லோகேஸ் நுணுக்கமாக விளையாட்டை கற்றுக்கொண்டு புகழ்பெற்ற வாழ வேண்டும் என்று வாழ்த்தினார்.” பெற்றோர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்தார்இராஜஸ்தான் வரை சென்று சிறப்பாக விளையாடிய மாணவர் லோகேஸ் அவ்களுக்கு பள்ளி நிர்வாகதததின் சார்பாக 3000 மூவாயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் சக மாணவ, மாணவியர்கள் அனைவரும் வாழ்த்துகளைக் கூறினார்கள்
Next Story