தளி அருகே சிமெண்டு கல் தலை மீது விழுந்து தொழிலாளி உயிரிழப்பு.

X
திருவண்ணாமலை மாவட்டம் நம்மியம்பட்டி அருகேயுள்ள மேல்குப்பசானவூர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் சக்திவேல் (18) இவர் கட்டிட வேலைக்காக தளி அடுத்த மதகொண்டப்பள்ளியில் வேலை செய்து கொண்டிருந்த போது லிப்ட்டில் இருந்த சிமெண்டு கல் ஒன்று சக்திவேல் தலையின் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே சக்திவேல் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்தத தளி போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

