நவீன சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி

X
குமரி மாவட்டம் அழகப்பபுரத்தில் அன்னை வேளாங்கண்ணி சிற்றாலயத்தின் அருகில் அமைந்துள்ள மேற்கு பேருந்து நிறுத்தத்தில் தினமும் ஏராளமான பயணிகளும், பொதுமக்களும் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்வார்கள். எனவே பொதுமக்கள் மற்றும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் அன்னை வேளாங்கண்ணி நற்பணி மன்றத்தின் சார்பில் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நவீன முறையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி திறப்பு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அழகப்பபுரம் புனித அந்தோனியார் ஆலய இறை பணியாளர் மார்ட்டின் கலந்துகொண்டு ஜெபித்து 24 மணி நேரமும் செயல்படும் நவீன சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
Next Story

