ஆடு திருடர்களை பிடிக்க ரோந்து பணி: ஆலங்குடி பகுதி மக்கள் கோரிக்கை!

X
ஆலங்குடி, கறம்பக்குடி தாலு காவுக்கு உட்பட்ட வடகாடு, மாங்காடு, அணவயல், புள்ளான் விடுதி, கொத்தமங்கலம், குளமங் கலம், பனங்குளம், மாங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இப்பகுதி விவசாயிகள் அதிக அளவில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், வீடு களில் கட்டியிருக்கும் ஆடுகளை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் திருடி செல்லும் சம்பவம் கடந்த சில மாதங்களாக அடிக்கடி நடந்து வருகிறது. ஆடுகள் கத்தும் சத்தம் வெளியே கேட்காமல் இருக்க அதன் வாயை பிளாஸ்திரியால் ஒட்டி இருசக்கர வாகனம் அல்லது கார்களில் கடத்தி சென்று விடுகின்றனர். இதனால், ஆடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படு கிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ஆடு திருட்டு சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, போலீசார் நள்ளிரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடு பட்டு ஆடு திருடர்களை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

